ஆஸ்திரேலியாவிற்கு அணு ஆயுதங்களை தாங்கி செல்லக்கூடிய 3 நீர்மூழ்கி கப்பல்களை விற்பனை செய்ய சம்மதம் தெரிவித்த அமெரிக்கா
இந்தோ-பசிபிக் கடல் பிராந்தியத்தில், சீனா ஆதிக்கம் செலுத்துவதை கட்டுப்படுத்தும் விதமாக, ஆஸ்திரேலியாவிற்கு அணு ஆயுதங்களை தாங்கி செல்லக்கூடிய மூன்று நீர்மூழ்கி கப்பல்களை விற்பனை செய்ய அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தில், அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் ஆகியோர் முன்னிலையில் முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும், அமெரிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை, பிரிட்டனும், ஆஸ்திரேலியாவும் இணைந்து தயாரிக்க உள்ளன.
Comments