பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறல் மற்றும் ஊடுருவல்களால் ஏற்படும் பாதிப்புகளை அனுமதிக்க முடியாது - இந்தியா

0 1799

பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறல் மற்றும் ஊடுருவல்களால் ஏற்படும் பாதிப்புகளை அனுமதிக்க முடியாது என இந்திய வெளியுறவுத்துறையின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் சீன எல்லையான கிழக்கு லடாக்கில் இருநாடுகள் இடையிலான பிரச்னைகள் முடிவுக்கு வரவில்லை என்றாலும் ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே வேளையில் பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் நட்புறவை பேணுவதையே இந்தியா விரும்புவதாகவும், எல்லையில் ஊடுருவல், மற்றும் போர்நிறுத்த மீறல்களை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments