ஜெர்மனியில், ஊதிய உயர்வு வழங்கக்கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட விமான நிலைய ஊழியர்கள்..!
ஜெர்மனியில், ஊதிய உயர்வு வழங்கக்கோரி விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், விமான சேவை முடங்கியது.
இரவு நேரம், வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பணியாற்றுவதற்கு கூடுதல் ஊதியம் வழங்கக் கோரி, பெர்லின், பிரிமென், ஹம்பெர்க் விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால், தலைநகர் பெர்லினில் மட்டும் 200 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சுமார் 45,000 பயணிகள் பாதிப்புக்கு உள்ளாகினர்.
அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை சமாளிப்பதற்கு, விமான நிலைய ஊழியர்கள் தங்களுக்கு 10.5 சதவீத ஊதிய உயர்வு வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments