இங்கிலாந்தில், ஊதிய உயர்வுக் கோரி அரசு மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான இளநிலை மருத்துவர்கள் வேலை நிறுத்தம்..!

0 1273

இங்கிலாந்தில், ஊதிய உயர்வுக் கோரி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான இளநிலை மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளதால், மருத்துவமனைக்கு வெளியே நோயாளிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பணவீக்கம் அதிகரிப்பு, பணிச்சுமை, ஊதியக்குறைப்பு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக தேசிய மருத்துவ சேவையின் மருத்துவ பணியாளர்கள் மூன்று நாள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்களில் 45 சதவீதம் பேர் இளநிலை மருத்துவர்கள் என்பதால், அவசரகால மருத்துவச் சேவைகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments