ஃப்ளு காய்ச்சலுக்கான தடுப்பூசிக்கு தற்போது அவசியம் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 1730

தமிழ்நாட்டில் ஃப்ளூ காய்ச்சல் பரவி வரும் நிலையில், திருச்சியில் உயிரிழந்த இளைஞரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, H3N2 வைரஸ் பாதிப்பால் அவர் உயிரிழந்தாரா என்பது குறித்து, அறிய ஆய்வகத்திற்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர், கிருமிநாசினி தீயில் விழுந்ததால் பலத்த தீக்காயமடைந்த சூரியக்குமார் என்ற சிறுவனுக்கு, கடந்த ஓராண்டாக வெற்றிகரமாக ஆறு அறுவை சிகிச்சைகள் செய்த மருத்துவக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்தார்.

சிறுநீரக செயலிழப்பு, இரத்தக்கொதிப்பு உட்பட பல பாதிப்புகளுக்கு ஆளான சூரியக்குமாரை அவரது தாயார் கருணைக்கொலை செய்ய கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில், மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து சிறுவனை குணப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments