நிதி நெருக்கடியால் இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகும் - ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க சூசகம்
இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க சூசகமாக தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையில் மார்ச் 9ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தலை நடத்துவதற்கு அரசு நிதி ஒதுக்காததால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கில், தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதியை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டதால், வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதியன்று தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில், மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட நாடாளுமன்றமே உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கும், நாடாளுமன்றம் எடுக்கும் தீர்மானத்தை எந்தத் தரப்பும் சவாலுக்கு உட்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.
Comments