பாக். முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு ஜாமீனில் வரமுடியாத கைது வாரண்ட்

0 1824
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு ஜாமீனில் வரமுடியாத கைது வாரண்ட்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைதுவாரண்ட்டை இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் பெண் நீதிபதி மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக மிரட்டல் விடுத்த வழக்கில் இம்ரான் கான் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இம்மாதம் 29-ம் தேதிக்குள் இம்ரான் கானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டதையடுத்து அவரை கைது செய்ய ஹெலிகாப்டர் மூலம் இஸ்லாமாபாத் போலீசார் லாகூர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே தோஷகானா வழக்கிலும் இம்ரான் கானுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments