தமிழில் எடுக்கப்பட்ட ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது.! ஆஸ்கரிலும் வரலாறு படைத்த., நாட்டு, நாட்டு பாடல்.!

0 4436

95 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்தியா இரண்டு விருதுகளை தட்டிச் சென்றது. ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம்பெற்ற நாட்டு, நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருது கிடைத்துள்ளது. தமிழ்நாட்டின் முதுமலை யானை பராமரிப்பு குறித்த The Elephant whisperers  படம் சிறந்த குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றது. “Everything Everywhere All at Once” சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை உள்ளிட்ட 7 பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், வண்ணமயமான தொடக்கத்துடன் ஆஸ்கர் விருதுகள் விழா நடைபெற்றது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்தியாவுக்கு இரண்டு விருதுகள் இந்த ஆண்டில் கிடைத்துள்ளன.

ஆர்.ஆர்.ஆர் படத்தில் சந்திரபோஸ் எழுதி கீரவாணி இசையமைத்த நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருது அறிவிக்கப்பட்டது ,மரகதமணி என்ற பெயரில் தமிழில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்த கீரவாணி ஆஸ்கர் விருதை பெற்றுக் கொண்டார்.

2009ம் ஆண்டில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து, குல்சார் எழுதிய slumdog millionaire படத்தின் ஜெய் ஹோ பாடலுக்குப் பிறகு இந்தியாவின் பாடலுக்காக கிடைத்த இரண்டாவது ஆஸ்கர் விருது இது. கோல்டன் குளோப் இசை விருதையடுத்து நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஆஸ்கர் விருதை வென்று இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்துள்ளது.


முன்னதாக மேடையில் நாட்டு நாட்டு படத்துக்கு நடிகை லாரன் கோட்லீப் நடனமாடினார்...பாடல் மற்றும் நடனத்தால் ஆஸ்கர் மேடை அதிர்ந்தது.

சிறந்த குறும்படம் -The Elephant whisperers படம் இந்தியாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் விருதை வென்று தமிழ்நாட்டுக்குப் பெருமை தேடித் தந்துள்ளது. ரகு என்ற அனாதை யானைக் குட்டியை பராமரித்த முதுமலை தம்பதியரான பொம்மன்- பெள்ளி வாழ்க்கையைப் பற்றிய படம் இது. கார்த்திக்கி கோன்சால்வஸ் என்ற பெண் இயக்குனர் இதனை இயக்கியுள்ளார்.

சிறந்த ஆவணப்படமாக நவால்னி தேர்வு செய்யப்பட்டது. இப்பிரிவில் இந்தியாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட
all that breathes விருதை பெற தவறியது.

சிறந்த படம், திரைக்கதை, நடிகை, படத்தொகுப்பு, துணை நடிகர் - நடிகை உட்பட ஏழு பிரிவுகளில் Everthing Everywhere all at once ஆஸ்கர் விருதுகளை வென்றது. தழுவல் திரைக்கதைக்கான விருதை டாக்கிங் உமன் படம் வென்றது.

சிறந்த இயக்குனர் Daniel Kwan, Daniel Scheinert ((“Everything Everywhere All at Once”))

சிறந்த நடிகராக கனடாவைச் சேர்ந்த நடிகர் Brendan Fraser “The Whale” படத்துக்காக விருது பெற்றார்.

சிறந்த நடிகையாக மிச்செல் யோ (Michelle Yeoh) “Everything Everywhere All at Once” படத்துக்காக விருது பெற்றார்

சிறந்த எடிட்டிங் பிரிவில் பால் ரோகர்ஸ் “Everything Everywhere All at Once” படத்துக்கு விருதைப் பெற்றுக்கொண்டார்.

ஆஸ்கருக்கு 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட படம் All quiet on the western front இந்தப்படம் சிறந்த வெளிநாட்டுப் படம், சிறந்த ஒளிப்பதிவு சிறந்த பின்னணி இசை, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு ஆகிய 4 விருதுகளை வென்றது.

சிறந்த குணச்சித்திராi நடிகர் கி ஹ்யூ குவான் சிறந்த குணச்சித்திர நடிகையாக ஜேமி லீ கர்ட்டிஸ் ஆஸ்கர் விருது பெற்றனர். சிறந்த அனிமேஷன் படத்திற்கான ஆஸ்கர் விருதை பினோச்சியோ வென்றது.

சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருது - black panther படத்துக்கும், சிறந்த ஒப்பனைக்கான விருது -The Whale படத்துக்கும் வழங்கப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவதார் 2 திரைப்படம், சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் -க்கான ஆஸ்கர் விருதை தட்டிச்சென்றது. சிறந்த ஒலி அமைப்புக்கான ஆஸ்கர் விருது டாம் க்ரூஸ் நடித்த The top gun படம் பெற்றது.

நடிகை தீபிகா படுகோன் கண்கவர் பிரத்தியேக ஆடை வடிவமைப்பில் தோன்றி, ஆஸ்கர் மேடையில் நாட்டு நாட்டு பாடல் நடன நிகழ்ச்சி நடைபெறப்போவதை அறிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments