உக்ரைனின் வுஹ்லேடார் நகரின் மீது தெர்மைட் குண்டுகளை ரஷ்யா வீசியுள்ளதாக தகவல்!
உக்ரைனின் வுஹ்லேடார் நகரின் மீது தெர்மைட் குண்டுகளை ரஷ்யா வீசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைனில் உள்ள பாக்முட் நகரைக் கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் சுமார் ஆயிரத்து 100 பேர் பலியாகினர். இந்நிலையில் வுஹ்லேடார் நகரின் மீது ரஷ்யா தெர்மைட் குண்டுகளை வீசியது.
அலுமினியம் மற்றும் இரும்பு ஆக்சைடு போன்ற உலோகங்களால் ஆன இந்த வகை குண்டுகள் மனித உடலில் பட்டதும் சதையை எரிக்கும் தன்மை கொண்டது. தெர்மைட் குண்டுகளை பொதுமக்கள் மீது பயன்படுத்துவது போர்க்குற்றமாகக் கருதப்படும்.
Comments