கம்யூனிஸ்டுகளை கேரள மக்களும் நிராகரிக்க வேண்டும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

0 1718

கம்யூனிஸ்ட்டுகளை உலகம் நிராகரித்து விட்டது, அதுபோல கேரளாவும் நிராகரிக்க வேண்டுமென பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.

கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரசும் கேரள அரசியலில் எதிர் எதிராக இருந்த போதும் திரிபுராவில் கூட்டாக தேர்தலில் போட்டியிட்டதாக விமர்சனம் செய்தார்.

கடந்த 9 ஆண்டுகளாக பிரதமர் மோடியின் ஆட்சியில் நாடு பாதுகாப்பாக இருப்பதாகவும், அதேநேரத்தில் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பாகிஸ்தானில் இருந்து எல்லைத் தாண்டிய தீவிரவாதம் தலைவிரித்தாடியதாகவும்,  அப்போது வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் மௌனமாக இருந்ததாகவும் அமித் ஷா தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments