நிச்சயமான துணை நடிகையை காதலித்தவருக்கு அடி-உதை.. காரில் கடத்தி சென்று தாக்கிய நடிகையின் உறவினர்கள்!

0 2236

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் ஏற்கனவே நிச்சயம் ஆன துணை நடிகையை காதலித்த துணை நடிகரை அழைத்து சென்று நடிகையின் உறவினர்கள் தாக்கி மயக்கமடைய செய்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பட்டாபிராமை சேர்ந்த துணை நடிகரான முத்துபிரசாத், தனது வீட்டு அருகே  வசிக்கும் ஆர்த்தி என்ற துணை நடிகையை காதலித்துள்ளார்.

ஆர்த்திக்கு ஏற்கனவே ஜெகன் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் தனது காதலை ஆர்த்தி, வீட்டாரிடம் தெரிவித்து, ஜெகனுடனான திருமணத்தை நிறுத்தும்படி கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், முத்துபிரசாத்திடம் பேச வேண்டும் என கூறி காரில் அழைத்து சென்று, சரமாரியாக தாக்கியுள்ளனர். தகவலின்பேரில் அங்கு விரைந்த போலீசார், முத்து பிரசாத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments