தனியாக இருக்கும் பெண்களை கட்டிப்போட்டு கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதாக மூன்று பேர் கைது!

0 1436

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வீடு புகுந்து தனியாக இருக்கும் பெண்களை கட்டிப்போட்டு கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

கோகுல் நகர் பகுதியில் சந்தேகப்படும்படியாக 3 பேர் சுற்றித் திரிவதாக கிடைத்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சதீஷ், மணிகண்டன், மஞ்சு ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில், தனியாக இருக்கும் பெண்களை வீடு புகுந்து கட்டிப் போட்டு  கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருந்ததும், ஏற்கெனவே 2 இடங்களில் மூன்று பேரும் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டிருப்பதும் கண்டறிய்பட்டது.

இதையடுத்து அவர்களை கைது செய்து, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி போலீசார் சிறையிலடைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments