ஸ்பெயினில் கடும் வெயிலால் வழக்கத்தை விட பலமடங்கு அதிக வெப்பம்
ஸ்பெயினில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வெப்பம் பதிவாகியுள்ளது.
மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே ஸ்பெயினில் வெப்ப காற்றானது வழக்கத்துக்கு மாறாக அதிகரித்து காணப்படுகிறது. சராசரி வெப்பநிலையை விட 7 முதல் 13 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்துள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
சில பகுதிகளில் 30 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை பதிவாகி உள்ளது. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, பொதுமக்கள் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.
Comments