கோவாவில் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய விமானப்படை
கோவாவில் நேரிட்ட காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
Mi-17 ரக ஹெலிகாப்டர்கள் மூலமாக இதுவரை சுமார் 47 ஆயிரம் லிட்டர் அளவுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு தீயணைப்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் 5ம் தேதி முதல் நேற்று வரை கோவாவில் 48 இடங்களில் காட்டுத் தீ பற்றிய நிலையில், 41 இடங்களில் தீ அணைக்கப்பட்டன. மற்ற 7 இடங்களில் பற்றிய காட்டுத் தீயை அணைக்கும் பணிகளை, இந்திய விமானப்படை, கடற்படை மற்றும் உள்ளூர் நிர்வாகம் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.
காட்டுத் தீயால் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு இதுவரை பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், மதேய் வனவிலங்கு சரணாலயத்தில் நிகழ்ந்த தீ விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Comments