சிறு தொட்டியில் 10 ஆண்டுகளாகத் தனிமையில் அடைக்கப்பட்ட திமிங்கலம் 'கிஸ்கா' உயிரிழப்பு ..!
உலகிலேயே மிகவும் தனிமையான திமிங்கலம் என அழைக்கப்பட்ட ’கிஸ்கா’ திமிங்கலம், 47 வயதில் உயிரிழந்தது.
3 வயது குட்டியாக இருந்தபோது ஐஸ்லேந்து அருகே பிடிபட்ட ஓர்க்கா இன திமிங்கலமான கிஸ்கா, வெவ்வேறு கேளிக்கை பூங்காக்களுக்கு அழைத்துசெல்லப்பட்டு, இறுதியில் கனடாவிற்கு கொண்டுவரப்பட்டது.
43 ஆண்டுகளாக கண்ணாடி தொட்டியில் அடைக்கப்பட்டுள்ள கிஸ்கா திமிங்கலம், முதலில் தன் ஜோடியை இழந்தது. பின்னர் அது ஈன்ற 5 குட்டிகளும் 5 வயதிற்குள்ளாகவே உயிரிழந்தன.
10 ஆண்டுகளுக்கு மேலாக சிறு தொட்டியில் அடைக்கப்பட்டிருந்த கிஸ்கா, தனிமையை தாங்கிக்கொள்ள முடியாமல் தலையால் கண்ணாடி தொட்டியை மோதிய காட்சிகள் இணையத்தில் வைரலாகின.
அதனை கடலில் விடுவிக்க விலங்கு நல ஆர்வலர்கள் தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்திவந்த நிலையில், பேக்டீரியா தொற்றால் கிஸ்கா உயிரிழந்தது அவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Comments