துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க பஞ்சாப் அரசு தீவிரம்.. 813 துப்பாக்கி உரிமங்கள் ரத்து..!

0 1896

பஞ்சாபில் துப்பாக்கிக்கலாச்சாரத்தை ஒழிக்க, அம்மாநில அரசு 813 துப்பாக்கி உரிமங்களை ரத்து செய்துள்ளது.

பஞ்சாபில் பொது நிகழ்ச்சிகள், மத வழிபாட்டுத்தல நிகழ்ச்சிகள், திருமணம் உள்ளிட்டவற்றிற்கு, துப்பாக்கிகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக, அம்மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அமன் அரோரா தெரிவித்துள்ளார்.

வரும் நாட்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பஞ்சாபில் மொத்தம் 3 லட்சத்து 73 ஆயிரத்து 53 துப்பாக்கி உரிமங்கள் உள்ளதாகவும், இதுவரை இரண்டாயிரம் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அம்மாநில அரசு, துப்பாக்கி உள்ளிட்டவைகளை கொண்டு சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments