தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய ஜார்க்கண்ட் இளைஞர் கைது..!
தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இளைஞரை திருப்பூர் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும் போலியான வீடியோக்கள் தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலி வீடியோ பரப்பியது தொடர்பாக சில தினங்களுக்கு முன்பு பீகாரை சேர்ந்த ருபேஷ் குமார் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் ரயில்வேயில் போர்ட்டராக பணியாற்றிவரும் ஜார்க்கண்ட்டை சேர்ந்த பிரசாந்த் குமார் என்பவர் தனது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில், வேறு மாநிலங்களில் நடந்த சம்பவத்தை தமிழகத்தில் நடந்தது போன்று சித்தரித்து வீடியோ பதிவிட்டிருந்தது தெரியவந்தது.
ஜார்க்கண்ட்டில் அவரை கைதுசெய்த தனிப்படை போலீசார் திருப்பூர் அழைத்து வருகின்றனர்.
Comments