லண்டனிலிருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தில், புகைபிடித்ததாக அமெரிக்கர் மீது வழக்குப்பதிவு

0 1106

ஏர் இந்தியா விமானத்தில் பயணிகளிடம் தவறாக நடந்துகொண்டது மற்றும் குளியலறையில் புகை பிடித்ததற்காக அமெரிக்காவை சேர்ந்த பயணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

லண்டனில் இருந்து மும்பை வந்த விமானத்தில் அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த ரமாகாண்ட் என்ற பயணி வந்துள்ளார். குளியலறையில் அவர் புகை பிடித்தபோது அலாரம் அடித்ததையடுத்து விமான பணியாளர்கள் அவரிடம் இருந்து சிகரெட்டை பிடிங்கி வீசி, இருக்கைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

பின்னர் சிறிது நேரம் கழித்து அவர் விமானத்தின் கதவை திறக்க முயன்றதால், பணியாளர்கள் அவரது கைகள் மற்றும் கால்களை கட்டி இருக்கையில் அமரவைத்ததோடு, மும்பை சாஹார் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து அமெரிக்க பயணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments