இவரு அட்டூழியம் தாங்க முடியலைங்க.. 50 வயது கல்லூரி முதல்வர் கைது..! போக்சோவில் சிக்கிய ஆணழகன்

0 4980
இவரு அட்டூழியம் தாங்க முடியலைங்க.. 50 வயது கல்லூரி முதல்வர் கைது..! போக்சோவில் சிக்கிய ஆணழகன்

சென்னை  நந்தனம் YMCA உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர், முதலாம் ஆண்டு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ஒரு மாணவி அளித்த புகாரில் முன் ஜாமீன் பெற்று தப்பிய 50 வயது ஆணழகன் போக்சோவில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

தமிழகத்திலேயே பிரசித்தி பெற்றது சென்னை நந்தனம் YMCA உடற்கல்வியியல் கல்லூரி. இந்த கல்லூரியின் முதல்வராக கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஆபிரகாம் என்பவர் பணிபுரிந்து வந்தார். 50 வயதான இவர் விளையாட்டுப் போட்டிகளில் தமிழக அளவு போட்டிகள், இந்திய அளவு போட்டிகள், ஆசிய அளவிலான போட்டிகளில் பல தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றவர்

மேலும், பாடி பில்டிங் துறையில் மாவட்ட அளவில் பல பரிசுகளை பெற்றுள்ள ஜார்ஜ் ஆபிரகாம், பயிற்சிக்கு வரும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கூடுதலாக ஜிம் ஒர்க் அவுட் பயிற்சியும் கொடுத்து வந்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பயிற்சிக்கு வந்த முதுகலை உடற்கல்வி மாணவி ஒருவருக்கு ஜார்ஜ் ஆபிரகாம் தொடர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இரவில் போன் கால் செய்து உடற்பயிற்சி டிப்ஸ் தருவதாக கூறி பாலியல் ரீதியாக பேசி தொல்லை கொடுப்பதாகவும் பாதிக்கப்பட்ட மாணவி சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஜார்ஜ் ஆபிரகாம் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், பாலியல் தொல்லை கொடுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகள் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் முன்ஜாமீன் பெற்ற அவர் சிறிது நாட்களிலேயே மீண்டும் கல்லூரிக்கு திரும்பினார்.

இந்த நிலையில் YMCA கல்லூரி நிர்வாக குழு வெள்ளிக்கிழமை சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தது. அதில் கடந்த ஆண்டு பயிற்சிக்கு வந்த மாணவிகளிடம் தொடர்ச்சியாக கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்தததாகவும், குறிப்பாக 18 வயது நிறைவடையாத ஒரு இளங்கலை மாணவியிடம் ஸ்பெஷல் ட்ரைனிங் கொடுப்பதாக மாலை நேரத்தில் ஜிம்முக்கு தனியாக வரச் செய்து அந்த மாணவிக்கு உடற்பயிற்சி எனச் சொல்லி க்ரெஞ்ச் எக்ஸர்சைஸ், லெக் எக்ஸர்சைஸ் என்ற பெயரில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் எனவும் கல்லூரி நிர்வாகக்குழு தெரிவித்திருந்தது

பாதிக்கப்பட்ட மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் ஜார்ஜ் ஆப்ரகாம் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது. இதையடுத்து போக்சோ சட்டம் மற்றும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த சைதாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார், ஜார்ஜ் ஆபிரகாமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கல்லூரி நிர்வாக குழு அளித்த புகாரின் அடிப்படையில் கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் பயிற்சிக்கு வந்த மாணவிகளில் எத்தனை பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்? எத்தனை ஆண்டுகாலமாக மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார்? என்பது குறித்து சைதாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்லூரியில் படிக்கின்ற மாணவிகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய கல்லூரி முதல்வரே காமுகனாக வலம் வந்த சம்பவம் பெற்றோரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments