புதிய வீடு வாங்க வந்தவரை பணம் பாக்கிக்காக கடத்தி சென்று சித்ரவதை செய்த புகாரில் 3 பேர் கைது!

0 1858

சென்னையில் புதிய வீடு வாங்க வந்தவரை பணம் பாக்கிக்காக தனி அறையில் அடைத்து சித்ரவதை செய்த புகாரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பூந்தமல்லியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் அண்ணாநகரில் வீடு வாங்க ஜவஹர் என்பவரை அணுகியுள்ளார். பின்னர் அவரிடம் வீட்டுக்கான 36 லட்சம் ரூபாயில் 28 லட்சத்தை ரொக்கமாகவும், மீதி தொகையான 8 லட்சத்துக்கு காசோலை கொடுத்துள்ளார்.

இந்த ரூபாய் கிடைக்காத நிலையில் பிரகாசை தனியாக அழைத்து சென்ற ஜவஹர், தனது நண்பர்கள் முருகராஜ் , ரமேஷ் ஆகியோருடன் இணைந்து, தனி அறையில் அடைத்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

பிரகாசிடம் வெற்று தாள்களில் கையெழுத்து பெற்று அவரது கார் மற்றும் வங்கி பணத்தையும் பறித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments