ஆசிரியர் மீது பைக்கை ஏற்ற முயன்ற மாணவன்... பள்ளியில் பகிரங்க மிரட்டல்..! முக்கால் பேண்ட் அட்ராசிட்டீஸ்

0 15607

வேலூர் மாவட்டம் தட்டப்பாறையில் ஆசிரியர் மீது மோட்டார் சைக்கிளைக் கொண்டு மோதுவது போல ஓட்டிச் சென்று சீருடை இல்லாமல் பள்ளிக்கு வந்த மாணவர் ஒருவர் , உறவினரை பள்ளிக்கு அழைத்து வந்து ஆசிரியரை மிரட்டிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறையில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 450 மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஒருவன், பள்ளி நேரமான காலை 11 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்ததோடு, எதிரே வந்த ஆசிரியர் மீது இடிப்பது போல வந்து கட் அடித்து சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பெற்றோரை அழைத்து வரும்படி மாணவனை எச்சரித்து அனுப்பி வைத்த நிலையில் அவனோ மாமா என்ற ஒருவரை அழைத்து வந்தான். மாணவன் இப்படி நடந்து கொள்ளலாமா ? கீழே விழுந்தால் என்னவாகும் ? என்று கேட்ட ஆசிரியரிடம், நீங்கள் ஏன் 11 மணிக்கு வெளியேச் சென்றீர்கள்? உங்களிடம் லைசென்ஸ் இருக்கிறதா ? ஹெல்மெட் உள்ளதா ? என்று எதிர் கேள்வி கேட்டார், மாணவன் அழைத்து வந்த ஆசாமி

அந்த மாணவனும் ஆசிரியரை மதிக்காமல் மிரட்டும் தோரணையில் வாக்குவாதம் செய்தான்

ஆசிரியர் தன்னிடமிருந்த லைசென்சை எடுத்து காண்பித்ததோடு, தான் அரை நாள் லீவு எடுத்திருப்பதாக விளக்கமளித்து விட்டு, மாணவனை கண்டித்து ஒழுங்காக படிக்கச் சொல்லுங்கள் , சீறுடை அணிந்துவர சொல்லுங்கள் என்று அறிவிறுத்தினார்

தூக்கி விடப்பட்ட சட்டைக் காலர், மடித்து விடப்பட்ட முக்கால் பேன்ட், கையில் வளையத்தோடு நின்ற அந்த மாணவன் தனக்கு பரீட்சையே தேவையில்லை என்று கூறி விட்டு வெளியேச் சென்றான்


பள்ளி மாணவனின் இந்த அடாவடி வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments