நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இரண்டு சிவிங்கிப் புலிகள் குனோ வனப்பகுதியில் விடுவிப்பு!
நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இரண்டு சிவிங்கிப் புலிகள் மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் நேற்று விடுவிக்கப்பட்டன.
ஓபன் மற்றும் ஆஷா என்று பெயரிடப்பட்ட சிவிங்கிப் புலிகள் கடந்த 6 மாதங்களுக்கு முன் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டன. தற்போதைய சூழலுக்கு பழக்கிய பின் வனத்தில் விடுவிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன் முற்றிலும் அழிந்து போன சிவிங்கிப் புலிகளை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக கடந்த ஆண்டு செப்டம்பரில் நமீபியாவில் இருந்து 20 சிவிங்கிப் புலிகள் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டன
Comments