இந்தியாவின் நிதியுதவியால் சுமார் 40 லட்சம் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வாங்கியுள்ள இலங்கை அரசு!

0 1497

இந்தியா அளித்த நிதியுதவி மூலம் சுமார் 40 லட்சம் மாணவ மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை இலங்கை அரசு வாங்கியுள்ளது.

உணவு, எரிபொருள், மருந்துகள், தொழில் வளர்ச்சிக்கான பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு சுமார் ஒரு பில்லியன் டாலர் நிதித் தொகுப்பை கடந்த ஆண்டு இலங்கைக்கு இந்தியா அளித்தது.

இதில் 10 மில்லியன் டாலரை இளம் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை அச்சிட இலங்கை அரசு செலவிட்டிருப்பதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் நடப்புக் கல்வியாண்டில் சுமார் 40  லட்சம் மாணவர்களுக்கு 45 சதவீத அளவுக்கு பாடப்புத்தகங்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments