நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு நாளை தொடக்கம்
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் மீண்டும் நாளை கூடுகிறது.
அடுத்த மாதம் 6ந் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் பட்ஜெட் மீதான மானியக் கோரிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படும்.
மாநிலங்களவையில் 26 மசோதாக்கள், மக்களவையில் 9 மசோதாக்கள் என 35 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கூட்டுறவுச் சங்கம் தொடர்பான மசோதாவும் ஜன்விஸ்வாஸ் திருத்த மசோதாவும் கடந்த குளிர்காலக் கூட்டத்தொடரின் போது சி.பி.ஜோஷி தலைமையிலான நாடாளுமன்றத்தின் நிலைக்குழு ஆய்வுக்குஅனுப்பி வைக்கப்பட்டதால், அந்தக் குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது.
Comments