ஆஸ்திரேலிய கடற்படைக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'வருணா' டிரோன்களை விற்க இந்திய நிறுவனம் பேச்சுவார்த்தை ..!

0 1321

ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் இந்தியாவிற்கு வருகை தந்துள்ள நிலையில், அந்நாட்டின் கடற்படைக்கு டிரோன்களை விற்கும் வகையில், அதனை தயாரித்த இந்திய நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மனிதர்கள் மற்றும் சரக்குகளை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள அந்த 'வருணா' டிரோன்கள், 130 கிலோ எடையுடன் 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு, 30 நிமிடங்கள் வரை பறக்கும் திறன் கொண்டது.

இந்நிலையில், டிரோன்களை விற்க பேச்சுவார்த்தை நடத்துவதை உறுதி செய்த சாகர் டிபென்ஸ் இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைவரான நிகுஞ் பரஷார் (nikunj parashar), டிரோன்களை உருவாக்க இந்திய கடற்படை பெரிதும் ஆதரவளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

'வருணா' டிரோன்களை ஐ.என்.எஸ். விக்ராந்த் உள்பட பெரிய போர்க்கப்பல்களில் நிலைநிறுத்தும் வகையில், இந்திய கடற்படை ஆர்டர் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments