உலகின் மிக நீளமான ரயில்வே நடை மேடையை கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் நாளை திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி..!
உலகின் மிக நீளமான ரயில்வே நடை மேடையை கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் பிரதமர் மோடி நாளை திறந்துவைக்கிறார்.
அங்குள்ள ஸ்ரீ சித்தரூதா சுவாமிஜி ரயில் நிலையம் மாநிலத்தின் 2வது பரபரப்பான ரயில் நிலையமாகும். பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, கோவா உள்ளிட்ட நகரங்களை இணைக்கும் முக்கிய ரயில் நிலையமாக இந்த ரயில் நிலையம் விளங்குகிறது.
இங்கு 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒன்றரை கிலோமீட்டர் நீளத்துக்கு கட்டப்பட்டிருக்கும் ரயில்வே நடைமேடையானது, உலகின் மிக நீளமான நடைமேடை என கின்னஸ் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
Comments