திவாலாகி மூடப்பட்ட அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி.. விலைக்கு வாங்க விருப்பம் தெரிவித்துள்ள எலான் மஸ்க்..!
அமெரிக்காவின் முக்கிய வங்கிகளில் ஒன்றான சிலிக்கான் வேலி வங்கி திவாலாகி மூடப்பட்ட நிலையில், வங்கியை வாங்க எலான் மஸ்க் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஸ்டார்ட் அப் மற்றும் வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களிடமிருந்து அதிகப்படியான வைப்புத் தொகைகளைப் பெற்று நிதியுதவி, கடனுதவிகளை அளித்து வந்த சிலிக்கான் வேலி வங்கி, வட்டி விகிதம் உயரத் தொடங்கி, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்களது டெப்பாசிட் தொகையை திரும்பப் பெற்றதால், திவாலானது.
வங்கியின் தலைவர் கிரெக் பெக்கர் தனது டிவிட்டர் பக்கத்தில், தான் ஒரு புதிய பார்ட்னர்-ஐ தேடி வருவதாகத் தெரிவித்திருந்தார். அதனைப் பார்த்த "ரேசர்" நிறுவனத்தின் தலைவர் மின் லியாங் டாங், ‘டிவிட்டர் நிறுவனம் சிலிக்கான் வேலி வங்கியை வாங்கி டிஜிட்டல் மயமாக்க வேண்டும்’ என தனது பக்கத்தில் பதிவிட்டார். அதற்கு பதிலளிக்கும் விதமாக, “வங்கியை வாங்கும் யோசனையை தாம் ஏற்கத் தயார்” என டிவிட்டர் சி.இ.ஓ எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
Comments