"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
இந்தோனேசியாவில் மீண்டும் வெடிக்கத் தொடங்கியது மெராபி எரிமலை..!
இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடித்து 7 கிலோ மீட்டர் அளவுக்கு சாம்பல் புகையை வெளியேற்றியதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
யோககர்த்தா பகுதியில் அமைந்துள்ள சுமார் 2,963 மீட்டர் உயரம் கொண்ட இந்த எரிமலை, சனிக்கிழமை பிற்பகலில் வெடித்ததில், அதிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு கீழ் நோக்கி அடர் சாம்பல் புகை வெளியேறியது.
இதனால், மெராபி எரிமலையை சுற்றி 7 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எரிமலை கடந்த 2010ம் ஆண்டு வெடித்த போது 350க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments