இன்புளூயன்சா காய்ச்சல் பரவல் - கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
நாடு முழுவதும் இன்புளூயன்சா காய்ச்சல் பாதிப்பு அதிரித்துள்ள நிலையில், போதிய மருந்துகள், மருத்துவ உபகரணங்களை மாநில அரசுகள் கையிருப்பில் வைத்திருக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் எழுதிய கடிதத்தில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை மாற்றம் போன்ற காரணிகள் இன்புளூயன்சா ஏ, அடினோ வைரஸ் போன்ற சுவாச நோய் கிருமிகள் பரவலுக்கு ஒரு காரணமாக உள்ளதாகவும், சிறார்கள், முதியோர்கள் வைரஸ் பாதிப்பிற்குள்ளாக அதிகம் வாய்ப்புள்ளதாகவும் ராஜேஷ் பூஷண் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில், சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Comments