அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையற்ற சூழலால், பாகிஸ்தான் தின இராணுவ அணிவகுப்பை அந்நாட்டு அரசு ரத்து செய்து உத்தரவு...!
பாகிஸ்தானில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையற்ற சூழலால், பாகிஸ்தான் தின இராணுவ அணிவகுப்பை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது.
கடந்த 1940-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட லாகூர் தீர்மானத்தின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23-ல், இராணுவ அணிவகுப்பு நடைபெறும்.
பாகிஸ்தானில் தற்போது பணவீக்கம் அதிகரிப்பாலும், பாதுகாப்புத் துறைக்கான செலவை குறைக்க சர்வதேச நாணய நிதியம் அழுத்தம் கொடுத்து வருவதாலும், ராணுவ அணி வகுப்பை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது.
Comments