தேஜஸ்வி, சகோதரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டில் ரூ.70 லட்சம் சிக்கியதாக தகவல்!
பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் மற்றும் அவரது சகோதரிகள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் 70 லட்சம் ரூபாய் ரொக்கம், ஒன்றரை கிலோ தங்கம் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு 2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தபோது ரயில்வே அமைச்சராக ராஷ்ட்ரீய ஜனதா தளம் நிறுவனர் லாலு பிரசாத் இருந்தார்.
அப்போது, ரயில்வேயில் வேலை அளிப்பதற்கு லஞ்சமாக நிலத்தை லாலு குடும்பம் தொடர்புடைய நிறுவனங்களால் பெறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பான வழக்கில், டெல்லி, மும்பை, பாட்னா உள்ளிட்ட பகுதிகளில் 24 இடங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது.
இதில் 900 அமெரிக்க டாலர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள், 540 கிராம் தங்கக் கட்டிகள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராகும்படி தேஜஸ்விக்கு சிபிஐ இன்று சம்மன் அனுப்பியுள்ளது.
Comments