நாடு சுதந்திரமடைந்த பிறகு அமைந்த மத்திய அரசுகளிடம் இருந்து கைவினை கலைஞர்களுக்கு உதவி கிடைக்கவில்லை: பிரதமர்
நாடு சுதந்திரமடைந்த பிறகு அமைந்த மத்திய அரசுகளிடம் இருந்து கைவினை கலைஞர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும், இதனால் வாழ்வாதாரத்துக்காக இன்னும் பலர் பழைய தொழில்களையே செய்து கொண்டிருக்கும் நிலை உள்ளது என்றும் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
பட்ஜெட்டுக்கு பிந்தைய பிரதமரின் விஸ்வகர்மா கெளசால் சம்மன் வெப்மினார் நிகழ்ச்சியில் காணொலி மூலம் அவர் உரை நிகழ்த்தினார். அப்போது அவர், சிறந்த படைப்பாளியாகவும், கலைஞராகவும் இறைவன் விஸ்வகர்மா கருதப்படுகிறார் என்றும், அதுபோல நமது சமூகத்தில் கருவிகளை கொண்டு கைகளால் புதிய பொருள்களை உருவாக்குவோர் நல்ல பாரம்பரியம் கொண்டவர்கள் என்றும் புகழ்ந்தார்.
பல நூறாண்டுகளாக பாரம்பரிய முறையின்மூலம் கைவினை துறையை விஸ்வகர்மா சமூகத்தினர் பாதுகாத்து வருவதாகவும், ஆத்மநிர்பார் பாரத்துக்கு அடையாளமாக திகழும், அவர்களை மத்திய அரசு கைவிட்டு விடாதென்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
Comments