புதுச்சேரியில் அதிகரித்து வரும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு... மார்ச் தொடக்கம் முதல் இதுவரை சுமார் 330 பேர் பாதிப்பு!
புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சலால் மார்ச் மாதம் தொடக்கம் முதல் இதுவரை சுமார் 330 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு மருத்துவமனைகளில் 12 பேர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெளிநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த காய்ச்சல் குறித்து அச்சப்படத் தேவையில்லை எனவும், இணை நோய் உஎள்ளவர்கள் கவனமாக இருக்கவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பவர்கள் கூட்டம் அதிகம் நிறைந்த பகுதிகயில் செல்லும் முகக்கவசம் அணிந்து செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments