ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில், வரலாறு காணாத அளவில் பெய்த கனமழை... வெள்ளத்தில் சிக்கிய குடியிருப்புவாசிகள்

0 1436

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில், வரலாறு காணாத அளவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய குடியிருப்புவாசிகளை, மீட்புப்படையினர் பாதுகாப்பாக வெளியேற்றி வருகின்றனர்.

வடமேற்கு பகுதிகளில் அதிகனமழை பெய்த நிலையில், ஆறுகளில் நீர் மட்டம் உயர்ந்து, Burketown பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது.

இதனால், அங்கு வசித்து வந்த 53 குடியிருப்புவாசிகள் வெளியேற்றப்பட்ட நிலையில், தொடர்ந்து ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும், அங்கு வசிக்கும் சுமார் 100 பேரை, உடனடியாக வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments