என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக பாமக சார்பில் கடலூரில் முழு அடைப்பு போராட்டம்..!
என்.எல்.சி நிறுவனம் நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக விளைநிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் கடலூரில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், மாவட்டம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முழு அடைப்பு போராட்டத்தை ஒட்டி மாவட்டம் முழுவதும் 40 சதவீத கடைகள் மூடப்பட்டுள்ளன. எனினும், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் வழக்கம் போல இயங்குகின்றன.
கடலூர் மாவட்டத்தில் அரசு பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்படுவதோடு, 50 சதவீதம் தனியார் பேருந்துகளும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன.
கடலூரில் இருந்து புதுச்சேரிக்கும் அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. பண்ருட்டி அருகே மர்ம நபர்கள் கல்வீசியதில் அரசு பேருந்தின் கண்ணாடி உடைந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாமகவைச் சேர்ந்த 80 பேர் கைது இதுவரை செய்யப்பட்டுள்ளனர்.
Comments