திறந்திருந்த வீட்டிற்குள் புகுந்து பணத்தை திருடிவிட்டு மதுபோதையில் கட்டிலுக்கு கீழ் படுத்து உறங்கிய திருடன் கைது!

0 1662

சென்னை அடையாரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திறந்திருந்த வீட்டிற்குள் புகுந்து பணத்தை திருடிய திருடன் மதுபோதையில் அங்கேயே கட்டிலுக்குக் கீழ் படுத்து உறங்கிய சம்பவம் நடந்துள்ளது.

கஸ்தூரிபாய் நகரில் வசிக்கும் வயதான தம்பதி வாரணாசிக்கு சென்று நேற்று திரும்பவிருந்ததால் அவர்களது மகன் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கியுள்ளார்.

இரவு ஊரிலிருந்து வீட்டிற்கு வந்த தம்பதி,  படுக்கை அறையில் கட்டிலின் கீழே குறட்டை சத்தம் வந்ததையடுத்து பார்த்தபோது, அங்கே திருடன் தூங்கிக் கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த அவர்கள் கூச்சலிடவே, சத்தம் கேட்டு திருடன் தப்பியோடியதால், அவர்களின் மகன் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீசார், பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் பதுங்கியிருந்த திருடனை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments