கொரிய போரின் போது அமெரிக்கா தயாரித்த 110 வெடிகுண்டுகளை வடகொரியா கண்டுபிடித்து அழிப்பு
கொரிய போரின் போது அமெரிக்கா தயாரித்த 110 வெடிகுண்டுகளை வடகொரியா கண்டுபிடித்து அழித்தது.
வடகொரிய தலைநகர் பியாங்யாங்-கில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில், அந்த தளத்தில் 110க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள், கண்ணிவெடிகள், கையெறி குண்டுகள் மற்றும் கொரியப் போரின்போது அமெரிக்கா தயாரித்ததாக கூறப்படும் மற்ற துருப்பிடித்திருந்த வெடிப்பொருட்களையும் தொழிலாளர்கள் கண்டுபிடித்தனர்.
பியாங்யாங் நகர பொது பாதுகாப்பு பணியகத்தின் நிபுணர்களால் அந்த வெடிகுண்டுகள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன.
Comments