ஆவின் நிறுவனத்திலிருந்து 202 லிட்டர் பால் பாக்கெட்களை கடத்த முயன்ற 4 பேர் கைது!

0 1703

நெல்லை ஆவின் நிறுவனத்திலிருந்து 202 லிட்டர் பால் பாக்கெட்களை வாகனத்தில் கடத்த முயன்ற லோடுமேன், பால் முகவர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆவின் நிர்வாகத்தில் இருந்து வாகனங்களில் எடுத்துச் செல்லப்படும் பாலில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரின் பேரில், அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அதில் கணக்கில் வராத 200 லிட்டருக்கு மேல் பால் திருடிச் செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஆவின் நிர்வாகம் தரப்பில் அளித்த புகாரின்படி பெருமாள்புரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து, லோடுமேன், முகவர் உள்பட 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments