மும்பையில் இந்தி தொலைக்காட்சித் தொடர் படப்பிடிப்பின் போது பயங்கரத் தீ விபத்து

0 1591

மும்பையில் இந்தி தொலைக்காட்சித் தொடர் படப்பிடிப்பின் போது பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அத்தொடரில் நடித்த நட்சத்திரங்கள், படக்குழுவினர் உள்பட அனைவரும் உயிர் தப்பினர்.

கோரேகான் பகுதியில் உள்ள தாதாசாகேப் பால்கே பிலிம்சிட்டியில் Ghum Hai Kisikey Pyar Meiin, தொடருக்கான படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருந்தது.

படக்குழுவினர் அனைவரும் ஒரு வீட்டில் தீப்பிடிக்கும் காட்சியை படமாக்க பணியாற்றிக் கொண்டிருந்த போது தீ வேகமாகப் பரவி நிஜமாகவே பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் பலமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments