இரு தரப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் சென்றார் ரிஷி சுனக்
இருதரப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் சென்றுள்ளார். பாரிஸில் உள்ள எலிசே அரண்மனைக்கு சென்ற அவரை அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வரவேற்றார்.
இன்றைய உச்சி மாநாட்டில் புலம்பெயர்ந்தோர் தொடர்பான வேறுபாடுகளை களைவது, ராணுவம் மற்றும் வணிக உறவுகளை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.
சந்திப்பில் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மீட்டெடுக்க முன்னுரிமை அளிக்கப்படும் என எலிசே அரண்மனை தெரிவித்துள்ளது.
Comments