இந்தியாவில் H3N2 வைரஸிற்கு முதன்முறையாக கர்நாடகாவில் முதியவர் உயிரிழப்பு
இந்தியாவில் H3N2 வைரஸிற்கு முதன்முறையாக கர்நாடகாவை சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த 87 வயது முதியவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 24-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மார்ச் 1-ம் தேதி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவர் இறந்து 2 நாட்களுக்குப் பிறகு வந்த பரிசோதனை முடிவில் அவருக்கு H3N2 வைரஸ் இருந்தது தெரியவந்ததாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. H3N2 வைரஸிற்கு ஹரியானாவிலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
H3N2 வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, இருமல், தொண்டை வலி உள்ளிட்ட பிரச்னைகள் காணப்படும் எனவும், நாடு முழுவதும் இதுவரை 90 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments