"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
ஜந்தர்மந்தரில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா உண்ணாவிரதம்..!
மகளிருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தக்கோரி, டெல்லியில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு விசாரணையில் ஆஜராகும்படி அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதையேற்று நாளை ஆஜராக இருப்பதாக கவிதா அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜந்தர் மந்தர் பகுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.
உண்ணாவிரதத்தில் பேசிய கவிதா, மகளிருக்கு இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா, நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படும்வரை போராட்டம் நிறுத்தப்படாது என்றார்.
Comments