உலக பெருங்கடல்களில் 170 லட்சம் கோடி பிளாஸ்டிக் துகள்கள் மிதப்பு.. 2040-க்குள் 2.6 மடங்கு உயர வாய்ப்பு என விஞ்ஞானிகள் எச்சரிக்கை..!

0 1589

உலகின் மொத்த நீர்ப்பரப்பில் 170 லட்சம் கோடி பிளாஸ்டிக் துகள்கள் மிதப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

1979 முதல் 2019 வரையிலான காலப்பகுதியில் உலக பெருங்கடல்களில் பிளாஸ்டிக் பொருள்கள் தொடர்பான ஆய்வை அமெரிக்க நிறுவனமொன்று மேற்கொண்டது.

இதில், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்கள், அட்லாண்டிக் மற்றும் மத்தியதரைக் கடலிலுள்ள 12 ஆயிரம் மாதிரிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட பதிவுகளை சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்தது.

அந்த ஆய்வின் முடிவில் 82 முதல் 358 லட்சம் கோடி பிளாஸ்டிக் துகள்கள், நீரில் மிதந்து வருவது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments