உள்நாட்டு தயாரிப்பான ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை பார்வையிட்டார் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேனிஸ்..!
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேனிஸ், ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை பார்வையிட்டார்.
நான்கு நாள் பயணமாக இந்தியா வந்திருக்கும் அந்தோணி அல்பேனிஸ், பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து அஹமதாபாத்தில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் போட்டியை கண்டு ரசித்தார்.
தொடர்ந்து மும்பை சென்ற அவர், முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த்தை பார்வையிட்டார்.
முன்னதாக அவருக்கு கடற்படை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
Comments