ஒரே ஆதாரிலுள்ள மின் இணைப்புகள் ஒரே இணைப்பாக மாற்றப்படாது : செந்தில்பாலாஜி

0 1859

அதிமுக ஆட்சியில் 12 மணி நேரம் மட்டுமே விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டு 18 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கமளித்துள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பேட்டியளித்த செந்தில் பாலாஜி, மின் இணைப்புடன் ஆதாரை இணைக்காத 67 ஆயிரம் வீடுகளுக்குச்சென்று இணைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், ஒருவரின் பெயரில் உள்ள பல்வேறு மின்சார இணைப்புகள் ஒரே இணைப்பாக மாற்றப்படாது எனவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments