இப்படி ஒரு திருடனா..? சிறைக்கு செல்வதற்காகவே வங்கி கொள்ளையில் ஈடுபட்ட நபர்..

0 1700
அமெரிக்காவில், சிறைச்சாலையிலிருந்து விடுதலையான 65 வயது நபர், மீண்டும் சிறைக்கு செல்வதற்காக வங்கியில் வெறும் ஒரு டாலர் கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

அமெரிக்காவில், சிறைச்சாலையிலிருந்து விடுதலையான 65 வயது நபர், மீண்டும் சிறைக்கு செல்வதற்காக வங்கியில் வெறும் ஒரு டாலர் கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சால்ட் லேக் சிட்டியிலுள்ள வெல்ஸ் ஃபார்கோ வங்கிக்கு வந்த டோனால்டு, வங்கியை கொள்ளையடிக்கப்போவதாக பேப்பரில் எழுதி அங்கிருந்த ஊழியர்களிடம் தந்துள்ளார்.

தனக்கு ஒரு டாலர் தருமாறு கேட்டு பெற்றுக்கொண்ட டோனால்டு, பின்னர் போலீசாரை வரவழைக்குமாறு ஊழியர்களிடம் கூறியுள்ளார்.

போலீசார் வர காலதாமதம் ஆனதால், வரவேற்பறையில் காத்திருந்த டோனால்டு, போலீசார் வந்ததும், தன்னிடமிருந்த ஒரு டாலரை ஒப்படைத்ததுடன், சிறைக்கு செல்ல இந்த குற்றத்தை செய்ததாக தெரிவித்துள்ளார். அவரை கைது செய்த போலீசார், சிறைக்கு செல்ல ஏன் இவ்வளவு பிடிவாதமாக உள்ளார் என விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments