புதுச்சேரியில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர்.. துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் தொடக்கம்..!
புதுச்சேரியில் 2023-24ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் தொடங்கி நடைபெற்றது.
எண்ணுங் காரியங்கள் எல்லாம் வெற்றி என்ற பாரதியாரின் பாடல் வரிகளுடன் உரையை தொடங்கிய ஆளுநர், 2023-24ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தொகை 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
கூட்டத்தொடர் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம், வரும் 13ஆம் தேதி முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளதாகவும், வரும் 31ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
Comments