தைவானை இணைக்க சீனா அழுத்தம் தரும் - அமெரிக்கா உளவுத்துறை அறிக்கை..!
தைவான் நாட்டை தன்னுடன் இணைக்க சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அழுத்தம் கொடுக்கும் என்று அமெரிக்காவின் புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் இடைவெளியை அதிகரிக்கும் என்றும் அமெரிக்காவின் ஆதிக்கத்தைக் குறைக்கும் என்றும் அமெரிக்க உளவுத் துறையின் வருடாந்திர அச்சுறுத்தல் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடுகளின் கடல் மற்றும் நிலப்பகுதிகளுக்கு சீனா உரிமை கோரி அரசு இயந்திரத்தையும் அதிகாரத்தையும் முழுவதுமாகப் பயன்படுத்தி வருகிறது என்றும் தைவானின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments