டாஸ்மாக் கடைகளில் மதுவிலக்கு போலீசார் திடீர் ஆய்வு... உரிமம் பெறாத பாரை மூடி சீல் வைத்து 2 பேர் கைது
பாக்முட் நகரை ரஷ்ய படைகள் தாக்கி வரும் நிலையில், அங்கிருந்து உக்ரைன் ராணுவம் பின்வாங்கப்போவதில்லை - ஜெலென்ஸ்கி
பாக்முட் நகரை ரஷ்ய படைகள் நாலாபுறமும் சூழ்ந்து தாக்குதல் நிகழ்த்திவரும் நிலையில், அங்கிருந்து உக்ரைன் ராணுவம் பின்வாங்கப்போவதில்லை என, அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
ஓராண்டுக்கு மேலாக நடைபெற்றுவரும் உக்ரைன் போரில், பாக்முட் நகரில் மட்டும் தான், 10 மாதங்களுக்கு மேலாக ரஷ்ய படைகளும், உக்ரைன் படைகளும் தீவிரமாக சண்டையிட்டுவருகின்றன.
80 ஆயிரம் பேர் வசித்த பாக்முட் நகரில் தற்போது 5,000 க்கும் குறைவானவர்களே வசிக்கின்றனர். பாக்முட் நகரம் ரஷ்யா வசம் சென்றால், அங்கிருந்தபடி கிழக்கு உக்ரைனில் உள்ள மற்ற நகரங்களுக்கு அவர்கள் ஊடுருவி விடக்கூடும் என்பதால், உக்ரைன் படைகள் பின்வாங்காமல் உள்ளன.
Comments