ஜார்ஜியாவில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டத்துக்கு எதிர்ப்பு.. போராடியவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்த போலீசார்..!
ஜார்ஜியாவில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டத்துக்கு எதிராக போராடிய மக்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்த நிலையில், அதிலிருந்து பெண் ஒருவரை, சக போராட்டக்காரர்கள் அரணாக நின்று காப்பாற்றினர்.
ஜார்ஜியாவில் தனியார் நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவது தொடர்பாக புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த சட்டம் கொண்டுவரப்பட்டால் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜார்ஜியா இணைவதில் சிக்கல் ஏற்படும் எனக் கூறி, அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தலைநகர் பிலிசியில் உள்ள நாடாளுமன்றம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன், தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.
உயர் அழுத்தத்துடன் பீய்ச்சி அடிக்கப்பட்ட தண்ணீரில் பெண் போராட்டக்காரர் ஒருவர் சிக்கவிருந்த நிலையில், சக ஆண் போராட்டக்காரர்கள் உடனடியாக அவரை சூழ்ந்து கொண்டு காப்பாற்றினர்.
Comments